அவுஸ்திரேலியாவுக்கு படகில் சட்டவிரோதமாகப் பயணித்து தஞ்சம் கோர முற்பட்ட 157 இலங்கைத் தமிழ் அகதிகளை கடந்த மாதம் நடுக்கடலில் தடுத்து நிறுத்திய அவுஸ்திரேலிய அரசு, இப்போது, அவர்களை இந்திய அரசு விசாரிக்க உதவ, அவுஸ்திரேலியப் பெருநிலப்பரப்புக்குள் அனுமதித்திருப்பதாக கூறியிருக்கிறது.
இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிடம் பேசிய அவுஸ்திரேலியக் குடிவரவு அமைச்சர் ஸ்காட் மாரிசன், இவர்கள் அனைவரும் இந்தியாவின் புதுச்சேரிக்கு அருகில் இருந்து வந்தவர்கள் என்றும், இந்தியாவில் இவர்களுக்குப் பாதுகாப்பு பிரச்சினை ஒன்றும் இல்லை என்பதால், இவர்களைப் பொருளாதாரக் குடியேறிகளாகவே கருதவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
அமைச்சரின் இந்தக் கருத்து யூகத்தின் அடைப்படையில் அமைந்தது என்கிறார் அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையைச் சேர்ந்த பால விக்னேஸ்வரன். அகதிகள் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள அவுஸ்திரேலிய அரசு, இந்த அகதிகளை முறையாக விசாரித்து முடிவெடுக்கவேண்டும் , இந்தியாவை இதில் நுழைக்கவேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்
அமைச்சர் மொரிசன் இது தொடர்பாக பல ஊகங்களை செய்துள்ளார் என்பதே எமது கருத்து மட்டும் அல்ல இங்கு உள்ள அகதிகளுக்காக போராடும் அமைப்புகளினதும் கருத்தாக உள்ளது
இந்தியாவில் இருந்து வந்தவர்கள் பொருளாதார அகதிகள்தான் இவர்களுக்கு அங்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லை என்று ஆனால் ஐக்கியநாடுகள் கூட சிலாகிச்சி பேசி இருக்கின்றது
அமைசர் இவர்கள் தொடர்பாக சொல்லும் விடயங்கள் உண்மையாக இருந்தால் இந்திய அதிகாரிகள் விசாரிப்பதர்க்கான தேவையே இல்லை என்பதுதான் எமது கருத்தாக உள்ளது
இங்கு வருபவர்கள் தம்மை அகதிகள் என அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு புகலிடம் வழங்க வேண்டியது இந்த நாட்டின் கடப்பாடாக உள்ளது அதை விட்டு முன் கூட்டியே அவர்கள் பொருளாதார அகதிகள் என்று வர்ணிப்பது சிறந்தது அல்ல
அகதிகள் பிரகடனத்தின் அமைவாக இவர்கள் அகதிகள் என்று தம்மை அடையாளப்படுத்தினால் இவர்களை தகுந்த முறையில் விசாரிக்க வேண்டும் அதை விட்டு முன்பு வந்தவர்கள் தொடர்பில் இந்தியா உதவியதால் இவர்களுக்கும் இந்தியா உதவ வேண்டும் என்று மொரிசன் நினைப்பது வியப்பாக உள்ளது.
இவர்களின் பிரச்சனயில் இந்திய மூக்கை நுழைப்பது அகதிகள் பிரகடனத்தை மிருவதகவே உள்ளது .
இவர்களின் இத்த புகலிடக் கோரிக்கை விடயத்தில் மொரிசன் சிறந்த ஒரு முடிவு எடுப்பார் என நம்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
















