இருளும் ஆபத்தும்தான் இலங்கை – Francis wade (தமிழில் – ஈசா)

refugees8மட்டக்களப்பில் ஒரு மதியம் இலங்கை கடற்படை படகு தனது பயணத்தை நிறுத்தியது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் அதிலிருந்து இறங்கினர். அவர்களை வான் ஓன்றிற்குள் ஏறுமாறு உத்தரவிட்ட கடற்படையினர் காலி நோக்கி கூட்டிச்சென்றனர்.

அவர்களை பின்னர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற அவர்கள் அதன் பின்னர் பாடசாலை ஒன்றிற்கு இட்டுச் சென்றனர். அந்தப் பாடசாலை உள்ளே 100 இற்கும் மேற்பட்ட குற்றத் திணைக்கள அதிகாரிகள் இவர்களுக்காக காத்திருந்தனர். அவுஸ்ரேலியா படகுகளில் இவர்களை கொண்டு வந்து கையளித்ததுமே அவர்கள் உசாராகி விட்டனர்.

அவுஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களில் தமிழர்கள் 4 பேரும் தனியாக பிரிக்கப்பட்டனர். அவர்கள் ஒரு மண்டபத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையிலிருந்தனர்.

நெல்சன் அழைக்கப்படும் தமிழர் முகத்தின் மீது அதிகாரி ஒருவர் தாக்கியதில் அந்த தமிழரின் முகத்திலிருந்து இரத்தம் கொட்டியது.

அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் ஆவேசமாக கேள்வி கேட்டனர். விடுதலைப் புலிகளுக்கு நீ பணம்கொடுத்தாயா? அவர்களை உனக்கு தெரியுமா என கேட்டு தாக்கினர். காலால் உதைத்தனர்.

இன்னொருவர் தண்ணீர் போத்தலால் அவரது முகத்தில் அறைந்தார். தமிழர்களை பின்னர் ஒரு இடத்திற்கு கூட்டிச் சென்று வரிசையாக இருக்குமாறு உத்தரவிட்டனர். பின்னர் இன்னொரு இடத்திற்கு கூட்டி வந்தனர். அதன் பின்னர் தொடர்ந்து கேள்விகளை கேட்டனர். நெல்சன் தனது வீட்டு முகவரியை தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதே நாளில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தனது வீட்டுக் கதவை தட்டியதாக நெல்சன் மனைவி குறிப்பிட்டார். காலியில் நெல்சனை விசாரித்துக் கொண்டிருந்த அதிகாரிகளே அவர்களை இங்கு அனுப்பி இருந்தார்கள்.

அவ்வேளை அவர் தனது 14 வயது மகனுடன் வீட்டில் தனியாக இருந்தார். வீட்டுக்குள் வந்த நபர்கள் நெல்சன் எங்கே எனக் கேட்டனர். அதில் ஒருவர் மகன் முகத்தில் ஓங்கி அறைந்தார். அப்பா எங்கே எனக் கேட்டனர். நான் தெரியாது என சொன்னேன் என அந்த சிறுவன் தெரிவித்தான்.

நெல்சன் யூலை மாதம் 9 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார். அவர் தனது கிராமத்திற்கு திரும்பி உள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு தப்ப முயல்வதற்கு முன்னர் தான் அனுபவித்த துயரங்களை அவர் தெரிவித்த வேளை அது தமிழர்கள் பலர் அனுபவித்த துயரங்களை பிரதிபலித்தது. 2009 இல் அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை ஆரம்பித்தது.—நெல்சனின் வீட்டிலிருந்து சிறிது தொலைவில்-

பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் அடைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு புகலிடம் வழங்குவதாக அறிவித்த பின்னர்-இலங்கை விமானப்படையினர் குண்டு மழை பொழிந்தனர்.2009 இல் துப்பாக்கிகள் மௌனமான பின்னரும் அரசாங்கம் மூச்சு திணறடிக்கும் அழுத்தங்களை தமிழர்கள் மீது திணித்து வருகிறது.

நெல்சனும் படகில் இருந்த ஏனைய 3 தமிழர்களும் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் தாங்கள் இன அடிப்படையில் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு தமிழரும் புலி ஆதரவாளரா என சந்தேகிக்கப் படுகின்றனர்.

நெல்சன் தான் நாடுகடத்தப்பட்ட பின்னர் தனது நிலைமை மோசமாகியுள்ளது என தெரிவிக்கிறார். நான் அச்சமடைந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டார் அவர்கள் ஒவ்வொரு நாளும் சைக்கிளில் என்னை கடந்து எதுவும் சொல்லமல் செல்கின்றனர்-நான் பொலிஸாருடன் பேசுவதற்கே அச்சமடைந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.
அந்தப் படகில் இருந்த சிங்களவர்கள் நிலையும் சொல்லும் படியாக இல்லை. சுஜீவ சப்ரமாதுவின் கணவர் இன்னும் சிறையிலேயே உள்ளார். அவரே இந்தப் படகுப் பயணத்தை திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து 3 மணி நேர பிரயாணத்திற்குப் பின்னர் வரும் ஒரு ஊரில் சிதைவடைந்த வீட்டில் அவர் கார்டியனை சந்தித்தார்.

அவரும் அவரது கணவரும் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள். அவர்களது பிள்ளைகள் சர்வதேசப் பாடசாலைகளில் கல்வி கற்று வந்தனர். ஆனால் அவர்கள் ஜே.வி.பி. இன் ஆதரவாளர்கள். அரசை கடுமையாக விமர்சிப்பவர்கள். அவரது 3 சகோதரர்களும் 2012 இல் அவுஸ்ரேலியா செல்ல முயன்றனர். ஆனால் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளனர். 2012 டிசெம்பரில் அவர் அவுஸ்ரேலிய தொலைக்காட்டி ஒன்றிற்கு அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். அதன் பின்னர் எல்லாமே மாறிப் போய் விட்டது என அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த வருடம் இரு தடவைகள் அவர்களது மகன் கப்பத்திற்காக கடத்தப்பட்டான். யூன் 2013 இல் முதலில் அவர்கள் அவுஸ்ரேலியா செல்ல முயன்றனர்.

சுஜீவாவிற்கும் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன- கார்டியனை சந்தித்த பின்னர் அவர் வீடு திரும்பவில்லை- அவர் வெளிநாட்டவருடன் என்ன கதைத்தார் என பொலிஸார் தங்களை கேட்டதாக அயலவர்கள் அவருக்கு தெரிவித்தனர். அதன் பின்னர் பல சம்பவங்கள் இடம்பெற்றன- சிவிலுடையில் சிலர் அவரை பின்தொடர்ந்தனர். பேருந்தில் அவர் ஏறும் வரை காத்திருந்துவிட்டு திரும்புகின்றனர். புலனாய்வு அதிகாரிகள் அதிகளவிற்கு அச்சுறுத்தலிற்கும் கண்காணிப்பிற்கும் பழக்கப்படுத்தப்பட்டுள்ள இலங்கையில் இது வழமையான தந்திரோபாயம்.

அவருக்கும் அவருடன் படகில் இருந்த ஏனையவர்களுக்கும் அரசாங்கம் கொண்டாடிய யுத்த வெற்றி என்பது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. இலங்கை ஒரு ஸ்திரத்தன்மை நிலவும் நாடு என்ற தோற்றம் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொலைக்காட்சியில் நீங்கள் காணும் அழகான அபிவிருத்தியடையும் இலங்கை என்று எதுவுமில்லை- உள்ளே ஒரே இருளும் ஆபத்தும்தான் என்கிறார் சுஜீவா.

நவுறுவில் உள்ள157 பேரும் திருப்பியனுப்பப்பட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்- சட்டவிரோதமாக பணயம் செய்ததற்கான இலங்கை வழங்கும் முதல் தண்டனை அதுவே- குற்றவாளிகளாக்கப்பட்ட அவர்கள் மீண்டும் அவுஸ்திரேலியா செல்ல முயல்வார்கள். இந்த ஆபத்தான வட்டம் தொடரும்.

-Globaltamilnews

Tags: ,

Leave a Reply