யாழில் மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் படையினர்

Water_supplyயாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக குடிநீரை பெற முடியாது சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு படையினர் குடிநீரை விநியோகித்து வருவதாக யாழ் படைகளின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
யாழ் படைகளின் தலைமையகம் மக்களுக்கான குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.

குடிநீர் பிரச்சினைகளை எதிர்நோக்கும் கிராமங்களுக்கு படையினர் தண்ணீர் கொள்கலன்கள் மூலம் குடிநீரை எடுத்துச் சென்று விநியோகித்து வருகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரத்து 223 குடும்பங்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் ரூபணி வரதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவர்கள் குடிநீரை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலத்தில் வறட்சியால் பாதிக்கப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை உயரக் கூடும் எனவும் மேலதிக அரச அதிபர் கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply