சுப்பிரமணியன் சுவாமியின் உருவப்பொம்மைக்கு மரண ஊர்வலம்! – பொலிஸார் தடுத்தனர்

subra-kodumbaviஇலங்கையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் சிந்தனையாளர்கள் இயக்கம் நேற்று புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

இதன் போது இயக்கத்தினர் மரண ஊர்வலம் ஒன்றை நடத்த முயன்றனர்.

சுப்பிரமணியன் சுவாமியின் உருவ பொம்மையை தாக்கிய வண்ணம் பாரதீய ஜனதா கட்சியின் கொடியால் போர்த்திய வண்ணம் அவர்கள் இந்த மரண ஊர்வலத்தை நடத்த முயன்றனர்.

அத்துடன் குறித்த மரண ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட உருவப்பொம்மையை எரிக்கவும் முயன்றனர். எனினும் பொலிஸார் அதனை தடுத்தனர்.

எதிர்வரும் 18ம் திகதி முதல் 20ம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்கு சுப்பிரமணியன் சுவாமி பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply