‘புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்தின் புதிய நிர்வாகத்துடன் ஓர் கலந்துரையாடல்„
அன்புடன் வணக்கம்.
பேர்ண் மாநிலம் அதனைச் சூழ்ந்து வாழும் பகுதிகளில் வசிக்கும் புங்குடுதீவு மக்களோடு “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” புதிய நிர்வாகம் ஓர் கலந்துரையாடலை நடாத்த விரும்புகின்றது.
“ஆதலால் ஊர்மீது கொண்ட காதலால் திரண்டு வருவீர்”.
புங்குடுதீவு சர்வோதய அமைப்பினர் கேட்டதற்கிணங்க குடிநீர் பௌஸர் ஒன்றை ஒன்றியத்தின் பழைய நிர்வாகத்தினர் அன்பளிப்புச் செய்தமை உலகறிந்த விடயம்.
அதேபோல் புங்குடுதீவு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி, உலகெங்கும் இயங்கும் புங்குடுதீவு அமைப்புகளிடமும், பொதுமக்களிடமும் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் அதன் அத்தியாவசியத் தேவை கருதி தன்னார்வங் கொண்டு புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை சேர்ந்த திரு.கனகரெத்தினம் குடும்பத்தினர் “ஊடு கதிர்ப்படக் கருவி” ஒன்றை அன்பளிப்புச் செய்தமை செயற்கரிய செயலாகும்.
இவற்றைத் தொடர்ந்து எமது அடுத்தகட்ட ஊர் நோக்கிய செயற்பாட்டுக்கு உறுதுணையாக இருப்பீர் என அன்புடன் அழைக்கின்றோம். பிறந்ததும், தவழ்ந்ததும் மண்தின்று வளர்ந்ததுமாய எங்கள் பூமி, சுடலைப் பொடியாகிப் போதல் உமக்குச் சம்மதமோ? ஆதலால் ஊர்மீது கொண்ட காதலால் திரண்டு வருவீர்.
*பேர்ண் மாநிலம் அதனைச் சூழ்ந்துவாழும் பகுதிகளில் வசிக்கும் புங்குடுதீவு மக்கள், தங்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் இணைந்து இக்கலந்துரையாடலில் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி..!
நடைபெறும் இடம்: Kirchgemeinde hause
Bern str-85
3018 BERN
(Bümpliz coop க்கும் Bümpliz Post க்கும் நடுவில் உள்ளது. பேர்ன் புகையிரத நிலையத்தில் இருந்து பும்ப்ளிஸ் நோக்கி செல்லும் ஏழாம்(7) இலக்க Tram எடுத்து Bümpliz Post தரிப்பிடத்தில் இறங்கவும்.)
நடைபெறும் நாள்:13.09.2014
நடைபெறும் நேரம்: 16: 00மணி
**தொடர்புகட்கு:…
திரு.நிமலன்.. 079.1244513
திருமதி பவானி தவம்.. 031.9514524
திரு.சுரேஷ்… 078.6087315
திருமதி தயாளினி(பேபி) தோமஸ் 078.8136230
திரு.சந்திரபாலன்.. 078.8183072
திரு.சேனாதிராஜா.. 078.8635726
திரு.குகன்.. 079.3990818
திரு.ஜெயகுமார்.. 077.9088483
திரு.பாபு.. 078.2616136
திரு.குழந்தை… 079.9373289
திரு.செல்லத்தம்பி.. 078.7390379
திரு.கண்ணன்.. 078.6316210
திரு.கருணாமூர்த்தி.. (Bumpliz)
இவ்வண்ணம்…
-புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.-
(**மேலதிக விபரங்களுக்கு… திரு.ரவி..079.2187075 // திரு.மதி..079.3982819 // திரு,ரமணன்..078.8005951 // திரு.சுரேந்திரன்..076.3268110 // திரு.ரஞ்சன்..077.9485214)
தகவல் – சுவிஸ் ரஞ்சன்
ஊடகப் பொறுப்பாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்
சுவிஸ்லாந்து,
22.08.2014.
















