யாழில் ஒருநாளில் 40 போ் விசர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளார்கள்!

hundயாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் விசர்நாய் கடிக்கு இலக்காகி ஒரு நாளில் 40 பேர்வரை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றார்கள் என்று யாழ்.போதனா வைத்திய சாலையில் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீ.பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதிகரித்துச் செல்லும் விசர்நாய் கடிக்கு இலக்காணவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு புதிய சிகிச்சைப் பரிவு ஒன்று யாழ்.போதனா வைத்திய சாலையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக விசர் நாய் கடிக்கு உட்படுத்தப்பட்டு வைத்திய சாலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லுகின்றது.
விசர்நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை நாம் மேற்கொள்ள முடியாது. நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்குவதே எமது பணியாகவுள்ளது.

விசர்நாய்கடியில் பாதிக்கப்படுபவர்கள் மரணத்தினை தளுவும் நிலைதான் அதிகமாக ஏற்படும். எனவே இவ்வாறான விடையங்களில் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து விசர்நாய் கடிக்கு உட்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் தொகை அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஒருநாளிற்கு 40 மேற்பட்ட நோயாளர்கள் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு வருகைதருகின்றார்கள். இதனால் விசர்நாய் கடிக்கான புதிய சிகிச்சை பிரிவினை ஆரம்பித்துள்ளோம்.

புதிய சிகிச்சை பிரிவிற்கான பொறுப்பு வைத்தியர், தாதியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Tags: ,

Leave a Reply