மனிதநேயமும் சமூக அக்கறையும் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்து பிரதி உபகாரம் பாராமல், சுயவிளம்பரம் தேடாமல், மக்கள் நலப்பணியாற்றிய மனிதநேயப்பண்பாளர் கார்த்திகேசு தங்கராஜா குலேந்திரன் (இந்திரன்) அவர்கள் அமரத்துவம் எய்திய செய்தி எம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் தனிப்பட்ட ரீதியில் தனக்கிருந்த உறவை கொண்டு, ஒரு காலகட்டத்தில் பல இளைஞர்களுக்கு கிராம அலுவலர் உத்தியோகத்தையும், இன்னும் வேறு பல உதவிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார். அன்றைக்கு இருந்த சூழலில் தமிழ் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட இந்த அரச தொழில் வாய்ப்புகள் மிகப்பெரிய விடையமாகும். இன்றுள்ள கிராம அலுவலர்கள் இதனை நன்றி உணர்வோடு நினைவு கூருவர்.
இவரைப்போலவே, இவருடைய சகோதரர்கள், குடும்பத்தினர் வவுனியா மாவட்டத்துக்கு ஆற்றிய பணிகள் இன்றும் வவுனியா மக்களுக்கு நினைவிலுள்ளன. மக்கள் பணிக்காகவே தங்கராஜா கனகம்மா குடும்பத்தினர் தமது மூத்த மகனை (அமரர் தங்கராஜா குலேந்திரன் அவர்களின் மூத்த சகோதரர்) கே.ரி.புலேந்திரன் அவர்களை பறிகொடுத்துள்ளனர்.
முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், இல 40/5, புகையிரத நிலையம் முன்பாக, வெளிவட்ட வீதி, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கார்த்திகேசு தங்கராஜா குலேந்திரன் (இந்திரன்) அவர்களின் இழப்பானது, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி, நலிவுற்ற மக்களுக்கும் கூட பேரிழப்பாகும்.
அன்னாரைப்பிரிந்து துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உற்றார்கள், உறவினர்கள், நண்பர்களுடன் நாமும் எமது உணர்வுகளைப்பகிர்ந்து கொள்ளுகின்றோம்.
ந.சிவசக்தி ஆனந்தன்,
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்,
தமிழ் தேசியக்கூட்டமைப்பு.
















