157 புகலிடக் கோரிக்கை யாளர்கள் விடயத்தில்12 மில்லியன் டொலர் நஷ்டம்

australia-flagஅவுஸ்ரேலியா அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் ஒவ்வொரு தடவையும் சட்டத்தை மாற்றும் போது 12.02 மில்லியன் டொலர்களை வீண் விரயம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

கடந்த காலம் இந்தியாவில் இருந்து வந்த 157 பேர் விடயத்தில் இந்த செலவு அதிகரித்துள்ளதாக அகதி அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. நடுக் கடலில் வைத்து அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப முயற்சி செய்தமை புகலிடக் கோரிக்கியாளர்களை இந்தியா வரைக்கும் அழைத்து சென்று மீண்டும் அவுஸ்ரேலியா கடல் எல்லைக்கு கொண்டு வந்தமை.

இரவோடு இரவாக விமானம் மூலம் நவ்ரு தீவுக்கு அனுப்பியமை இது போன்ற விடயங்களால் பணத்தை வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை சமூகத்துடன் இனைதுதிருந்தாள் இந்த செலவானது 10% குறைத்திருக்கலாம் என அந்த அமைப்பு மேலும் குற்றம் சுமத்தியுள்ளது

அகதிகள் விடயத்தில் அப்ட அரசாங்கம் அதிகளவிலான பணத்தை சும்மா வீண் விரயம் செய்து வருகின்றது என்று தெரிவித்துள்ளது.

Tags: ,

Leave a Reply