2009ம் ஆண்டுக்குப் பின்னர் எதற்காக எல்லாம் புலிகள் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தால் பெரும் வேதனை தான் மிச்சம்.
தற்போது புதிதாக புலிகள் அவுஸ்திரேலியாவில் மீளவும் ஒன்றிணைகிறார்கள் என்ற கட்டுக்கதையை, இலங்கையும் இந்தியாவும் இணைந்து வெளியிட்டுள்ளது. சமீபத்தில் ஆந்திராவில் அகப்பட்ட சிலர், ஈழத் தமிழர்களை அவுஸ்திரேலியாவுக்கு கடத்தி வந்தார்கள். அவர்களை விசாரித்ததில் புலிகளுக்கும் , அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக இந்தியா கூறியுள்ளதாக இலங்கை ஊடகங்கள் ஒரு கட்டுக்கதையை வெளியிட்டுள்ளது. குறித்த இந்த 6 பேரும் கைதான உடன் இந்தியா இப்படி அறிவிக்கவே இல்லை. அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை அன் நாடு எப்பாடு பட்டாவது இலங்கை அகதிகள் வருவதை தடுக்கவேண்டும் என்று கங்கணம் கட்டி அலைகிறது.
அன் நாடு , இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கூட்டுச் சேர்ந்தே இதுபோன்ற கட்டுக்கதைகளை வெளியிட்டு வருகிறது. புலிகள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்கிறார்கள் என்றும், அங்கே அவர்கள் மீளம்வும் ஒன்றிணைகிறார்கள் என்றும் இலங்கை சொல்லுமாம். உடனே அவுஸ்திரேலிய அரசு அதற்கு நடவடிக்கை எடுத்து, அப்பாவி அகதிகளை புலிகள் என்று கூறி இலகுவாக நாட்டை விட்டு நாடு கடத்தும். இதற்காகவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதனை புரிந்துகொள்ளாத பல தமிழ் ஊடகங்கள் கூட, சிங்கள அடிவருடிகள் சொல்லும் கருத்தை அப்படியே தமிழில் எழுதியுள்ளார்கள். புலிகள் அவுஸ்திரேலியாவில் ஒன்றிணைந்து , என்ன அங்கே தமிழீழம் வேண்டும் என்று சண்டைபிடிக்கப் போகிறார்களா என்ன ? அவுஸ்திரேலியாவில் அவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது ? அவர்கள் மீள இணைவது என்றால் அண்டைய நாடுகளில் அல்லவா அதனைச் செய்வார்கள். 3,000 மைல்களுக்கு அப்பால் உள்ள அவுஸ்திரேலியாவில் ஏன் இணையவேண்டும் ?
















