100 கிராம் 200 கிராம் அல்ல 15KG கஞ்சாவை பாத்தது உண்டா..? இதோ யாழ்ப்பாணத்தில் !

heyroinபோதைப் பொருட்கள் உலவும் மாபெரும் நகரமாக மாறியுள்ளது யாழ்ப்பாணம். ஆக மொத்தத்தில் கஞ்சாவை யாழ்ப்பாணத்தில் இன்னும் விதைக்கவில்லை.

அதுதான் பாக்கி இருக்கிறது. யாழ். இளவாலை நொனசைப் பகுதியிலுள்ள பற்றையொன்றில் இருந்து செவ்வாய்க்கிழமை (02) மாலை 15 கிலோ கஞ்சா பொதியொன்று மீட்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். பற்றைக்குள் கஞ்சா பொதியையொன்று இருப்பதை கண்ட கடற்படையினர், அதனை மீட்டு தம்மிடம் ஒப்படைத்ததாகப் பொலிஸார் கூறினர். இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் குறித்த கஞ்சா பொதி, கடல் வழியாக கொண்டு வரப்பட்டு, அவ்விடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இது வெறும் 100 கிராம் அல்லது 200 கிராம் கஞ்சா அல்ல. சுமார் 15 கிலோ எடையுடையது என்றால் எண்ணிப் பாருங்கள். இவை யாழில் வினியோகிக்கப்படவுள்ளதா ? இல்லை இங்கிருந்து வேறு இடம் எடுத்துச் செல்லப்படுகிறதா என்று தெரியவில்லை.

Tags: , ,

Leave a Reply