வன்னியில் மக்களுடன் இருந்து தமிழ் கத்தோலிக்க பாதிரிமாரை கண்காணிக்கும் புலனாய்வுப் பிரிவு!

CIDஇலங்கையின் பயங்கரவாத தடுப்பு விசாரணை திணைக்களத்துக்கு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடம் இருந்து நேரடி பணிப்புரைகள் கிடைத்துள்ளன.

இதன் அடிப்படையில் வன்னியில் இறுதிப்போரின் போது மக்களுடன் இருந்து தமிழ் கத்தோலிக்க பாதிரிமாரை கண்காணிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இவர்கள். ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு கண்கண்ட சாட்சிகளாக மாறக்கூடும் என்ற அடிப்படையிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலேயே பாதிரியார் ஏ அன்டன் ஸ்டீபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள ஆயர் இல்லத்தில் வைத்து இறுதிப்போரின் முக்கிய சாட்சிகள் சர்வதேச விசாரணைகளுக்கு சாட்சியமளிக்கலாம் என்ற சந்தேகத்திலேயே அவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.

வலிகாமம் உடுவில் ஹோலி பெமிலி தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் அன்டன் ஸ்டீபன், கடந்த செவ்வாய்க்கிழமையன்று கொழும்பு ஆயர் இல்லத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

போரின் போது நேரடியான சாட்சி என்ற அடிப்படையிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை ஆகஸ்ட் 20 ஆம் திகதியன்று மற்றும் ஒரு பாதிரியாரான மாயுலிஸ் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

இவர், யாழ்ப்பாணம் பருத்தித்துறை சென்தோமஸ் தேவாலயத்தை சேர்ந்தவராவார்.

இந்தநிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு பாதிரியார்களும் செய்தியாளரிடம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Tags: ,

Leave a Reply