இலங்கை அரசு சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்: ஐ.நா. மனித உரிமை அமைப்பு வேண்டுகோள்!

al gasainஜெனிவா: இலங்கை அரசு, மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பின் புதிய தலைவர் அல் உசேன் கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை அமைப்பின் புதிய தலைவராக ஜெய்த் ராத் அல் உசேன் பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்ற பின் முதன் முறையாக ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் உரையாற்றினார்.
அப்போது, ”இறுதிக்கட்ட போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசிடம் விசாரணை நடத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இலங்கை அரசு, மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் கவலை அளிக்கிறது. இதற்கு முன்னர் ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவராகப் பதவி வகித்த நவி பிள்ளையின் பணிகள் பாராட்டத்தக்கது. அவரது வழியிலேயே எனது பணிகளையும் தொடர இருக்கிறேன்” என்றார்.

Tags: , ,

Leave a Reply