கிழக்கில் எந்தப் பிரச்சனையும் இல்லை: ஆனால் வடக்கிற்காக 9,000 போராளிகளை இழந்தோம் !

GotaKarunaவடக்கு கிழக்கு என்று பிரதேசவாதம் பேசியே, இலங்கை தமிழர்களை சீரழித்த மனிதர் கருணா. கிழக்கு மாகாணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருந்திருக்கவில்லை.

ஆனால், வடபகுதியில் உள்ளவர்களின் பிரச்சினைகளுக்காக நாங்கள் அங்கு சென்று போராடினோம்’ என கருணா தெரிவித்துள்ளார். இந்த அநாவசியப் போராட்டத்தால் கிழக்கு மாகாணத்திலிருந்த தமது உறவுகளான 9,000 போராளிகளை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆனையிறவு மற்றும் ஜயசிக்குறு சமரில் 6,000 இற்கும் மேற்பட்ட கிழக்கு மாகாணப் போராளிகள் பலியாகினர்.

இழந்த உறவுகள் விலை மதிப்பிடமுடியாத சொத்துக்கள் எனவும் அவர் கூறினார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முதலைக்குடாவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ‘ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் பொது விளையாட்டு மைதான புனரமைப்பு வேலைகள் செவ்வாய்க்கிழமை (09.09.14) ஆரம்பமாகியது.

இதன்போது உரையாற்றுகையிலேயே கருணா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஆனால் இவர் ஒரு விடையத்தை மறந்து விட்டார். அது என்னவென்றால், இவர் சொல்லும் கிழக்கு மாகாணப் போராளிகள் எவரும் கருணாவுக்காக போராடவில்லையே. அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து, தேசிய தலைவரின் வழிநடத்தலில் போராடினார்கள். இன்றுவரை வடக்கத்தையான் , கிழக்கத்தையான் என்று பிரதேசம் பேசி தமிழர்களை பிரித்து வருவது கருணா தான். அது தான் சிங்களத்தின் தேவையாகவும் உள்ளது. இதனையே கருணா கோட்டபாயவுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறார்.

Tags: , ,

Leave a Reply