மீண்டும் ஒரு மலேசிய விமானம் விபத்துக்குள்ளானதா? சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி.

malaysia-airlinesகடந்த மார்ச் மாதம் MH 370 என்ற மலேசிய விமானம் மாயமாய் மறைந்து அதில் பயணம் செய்த 239 பயணிகள் என்ன ஆனார்கள் என்று இதுவரை தெரியாத மர்மமாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் MH 17 என்ற விமானம் உக்ரைன் தீவிரவாதிகளால் சுடப்பட்டு அதில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் மரணமடைந்தனர். தொடர்ந்து சோகங்களை சந்தித்து வரும் மலேசிய விமானத்தில் பயணிகள் பயணம் செய்யவே அஞ்சுகின்றனர். இந்நிலையில் இன்று காலை மலேசிய விமானம் ஒன்றில் திடீர் கோளாறு ஏற்பட்டதில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து இந்தியாவில் உள்ள ஐதராபாத்துக்கு வந்து கொண்டிருந்த MH 198 என்ற விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் மலேசியாவுக்கே அந்த விமானம் திரும்பியது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் ஐதராபாத்துக்கு பயணமானார்கள்.

ஆனால் மலேசிய விமானம் MH198 என்ற விமானத்தில் நடுவானில் திடீரென தீப்பிடித்ததாகவும், அதனால்தான் அவசர அவசரமாக கோலாலம்பூருக்கு திரும்பியதாகவும் சமூக வலைத்தளத்தில் செய்தி பரவிவருகிறது. இதனை மறுத்துள்ள மலேசிய விமான நிறுவனத்தின் நிர்வாகம் ‘ஆட்டோ பைலட்’ எனப்படும் விமானியின் இயக்கம் இன்றி, தானியங்கி முறையில், தாமாகவே நிலையாக பறப்பது என்ற வசதியில் திடீர்க்கோளாறு ஏற்பட்டதால் விமானம் திரும்பியதாகவும் தீப்பிடித்ததாக கூறப்படுவது உண்மையில்லை என்றும் கூறியுள்ளது.

Tags: , ,

Leave a Reply