தாமதமின்றி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கவும்: விக்கிரமபாகு வலியுறுத்தல்

vikramaயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விக்கிரமபாகு கருணாரத்தின வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நவ சமசமாஜக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள விக்கிரமபாகு,

யுத்த வெற்றி மூலம் இந்த நாட்டுக்கு எதுவித நன்மையும் கிடைக்கவில்லை. தமிழ் மக்கள் மாத்திரமன்றி சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சுமார் 33 ஆயிரம் சிங்களக்குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்தார்கள். இந்த நிலையில் யுத்த வெற்றியின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வும் உருவாகவில்லை.

தமிழ் மக்களுக்கும் எதிர்பார்த்த உரிமைகள் கிட்டவில்லை. இதன் காரணமாகவே இன்று சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது ஏற்பட்டுள்ளன.

எனவே இன்னொரு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் இந்நாட்டில் அனைத்து இனங்களும் சரிசமமாக வாழும் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.

அதற்கான முதல்கட்டமாக இனியும் தாமதிக்காது தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் வழங்கப்பட்டு, நியாயம் கிட்ட வழியேற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: ,

Leave a Reply