புலிகளுக்குத் தடை விதிக்காதிருந்தால் முள்ளிவாய்க்கால் நிலைமை வேறுமாதிரி அமைந்திருக்கும் : சிவாஜிலிங்கம்.

sivajilingamஜரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகள் விடுதலைப்புலிகளைத் தடை செய்யாது விட்டிருந்தால் முள்ளிவாய்க்கால் நிலைமை வேறுமாதிரி அமைந்திருக்கும் என வட மாகாண உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக மையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்:ஜரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றத்தின் தடை நீக்கம் தொடர்பான அறிவிப்பை நாங்கள் முழுமையாக வரவேற்கின்றோம். தடை நீக்கமானது எமது உரிமைகளுக்காக உறுதியாகப் போராடுவதற்கு சர்வதேசம் உதவியாக இருக்கும் என நம்புகின்றோம். எதிர்காலத்தில் இந்தியா,கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி எமது பிரச்சனைக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அத்துடன் இலங்கை அரசாங்கமும் தனது நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் எனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டிருந்தார்.

Tags: , ,

Leave a Reply