சீன வரலாற்றில் முதல்முறையாக அரசு அதிகாரி வீட்டில் $33 மில்லியன் கருப்புப்பணம் மீட்பு.

china-blackmoneyசீனாவில் உள்ள அரசு அதிகாரி ஒருவருடைய வீட்டில் சீன வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகை கருப்புப்பணத்தை சீன போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கைப்பற்றிய தொகை $33 மில்லியன் ஆகும்.

சீனாவின் Deputy chief at China’s National Energy Administration’s coal department என்ற பதவியில் இருக்கும் Wei Pengyuan என்பவருடைய வீட்டை சீன போலீஸார் சமீபத்தில் சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது அவருடைய வீட்டில் இருந்து $33 மில்லியன் கணக்கில் வராத கருப்புப்பணம் கைப்பற்றப்பட்டது,.

இந்த பணத்தை எண்ணுவதற்கு 16 பணம் எண்ணும் மிஷின்கள் கொண்டுவரப்பட்டன. இந்த பணம் முழுவதும் எண்ணி முடிப்பதற்குள் நான்கு மிஷின்கள் பழுதாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை கைப்பற்றப்பட்ட கருப்புப்பணத்தில் இதுதான் மிக அதிகபட்சமானது என சீன லஞ்ச ஒழிப்பு போலீஸார் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு கம்யூனியச நாட்டில் மிகப்பெரிய ஊழல் தொகை கைப்பற்றப்படுவதும் இதுதான் முதல் முறை. கருப்புப்பணத்தை பதுக்கிய Wei Pengyuan அவர்களை சீன போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags: , , , ,

Leave a Reply