இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்தின் மறுப்புக்கு மத்தியிலும் இலங்கைக்குள் வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணைகளை நடத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையினால் கடந்த மார்ச்சில் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் தமது விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என்று அந்த ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆணையாளரும் தொடர்ந்து இலங்கை அரசாங்கம்ääவிசாரணைகளுக்கு ஒத்துழைக்கவேண்டும் என்றும் தமது விசாரணையாளர்கள் இலங்கைக்குள் வந்து அதிகாரிகளையும் ஏனையவர்களையும் சந்திக்க வாய்ப்பளிக்கப்படவேண்டும் என்றும் கோரிவருகிறார்.
எனினும் இலங்கை அரசாங்கம் இந்தக்கோரிக்கையை தொடர்ந்தும் நிராகரித்து வருகிறது.
இந்தநிலையில் குறித்த விசாரணைக்குழுää தமக்கு கிடைத்த சிவில் சமூக அறிக்கைகள்ää அரசாங்க அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள்ää சாட்சியங்கள் என்பவற்றை கொண்டு உள்ள மீளாய்வை மேற்கொள்ளவுள்ளதாக இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளி;ன் மனித உரிமைகள் ஆணையாளர்ää இலங்கை தொடர்பிலான விசாரணைகளுக்காக கடந்த ஜூன் மாதத்தில் பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அடிசாரிää நியூஸிலாந்தின் மேல்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சில்வியா காட்ரைட் மற்றும் பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹான்கிர் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்தார்.
இந்தக் குழுவே தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
















