இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் யாழ் மாவட்ட ஒன்றுகூடல் நேற்று காலை 10 மணியளவில் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் இடம்பெற்றது. சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் கலந்துகொண்டிருந்தார். தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒன்றுகூடல் என அரச ஊழியர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னேற்பாடாக அரச ஊழியர்களின் வாக்குக்களைப் பெறுவதற்கான தேர்தல் பிரசாரமாக அமைந்திருந்தது.
நிகழ்வில் உரையாற்றிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சுதந்திரக்ககட்சியின் அமைப்பாளர் ஆகியோர் தமது உரையில் அடுத்த ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷவை வெற்றி பெற செய்வதையே தமது உரையில் வலியுறுத்தினர். இந்த நிகழ்வில் பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் , புகையிரத ஊழியர்கள், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர். விடுமுறை தினமான நேற்று ஒன்று கூடல் என அழைக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் இடம்பெற்றமைக்கு அரச ஊழியர்கள் தமது விசனத்தை தெரிவித்தனர்.
















