மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியானால் தாயகத்தில் தமிழ்த்தேசிய இனம் முற்றாக அழிக்கப்படும்!

sam-mavai-mahiமஹிந்த இராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சியில், தனக்கு ஆதரவு சேர்ப்பதற்காகவும் தமது ஆட்சியைப் பலப்படுத்துவதற்காகவும் ஸ்ரீலங்காவின் 69 ஆவது வரவு – செலவுத் திட்ட யோசனையை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

அவர் இந்த வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கான உபாயமாகக் பயன்படுத்தியுள்ளதுடன் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் நோக்குடன் அரச துறையினருக்கு சம்பளம் உள்ளிட்ட சலுகைகள், மக்கள் நலச்சார் சேவைகள் தொடர்பான அறிவிப்புக்களையும் விடுத்துள்ளார்.

இதேபோல் மஹிந்த ராஜபக்ஷ வரவு – செலவு திட்ட யோசனையை முன்வைத்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், மாவை. சேனாதிராசா உள்ளிடவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடலின் பொழுதுஅரசாங்கத்துடன் இணைந்து இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மஹிந்த மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதன்பொழுது தம்மிடமிருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்க முடியும் என ஆங்கிலத்தில் சம்பந்தன் கூறி மஹிந்தாவைத் திருப்திப்படுத்தியுள்ளாராம்.

மஹிந்தவின் இந்த அணுகுமுறை முற்றுமுழுதாகவே ஜனாதிபதித் தேர்தலை நொக்கிய நகர்வாகவே அமைந்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய தமிழ் மக்கள் தேர்தலை பகிஷ்கரித்ததால் மஹிந்த அரியணை ஏறினார்.

இத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க 4, 706,366 வாக்குகளை (48.43மூ) பெற்று போது மஹிந்த ராஜபக்ஷ 4,887,152 (50.29மூ) வாக்குகளைப் பெற்றார்.

இதனால் ரணில் 1,80,786 வாக்குகள் வித்தியாசத்தில் மஹிந்தவிடம் தோல்வியுற்றார். ஆனால் அக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் சுமார் 2,50,000 தொடக்கம் 3,00,000 வரையிலான வாக்காளர்கள் இருந்துள்ளனர். இந்த வாக்காளர்கள் அத்தேர்தலைப் புறக்கணித்ததால் மஹிந்த ரணிலிடம் தோற்கவில்லை.

இந்தவகையில் விடுதலைப் புலிகள் தேர்தலைப் புறக்கணிக்குமாறு பகிரங்கமாக அறிவித்திருந்தமை, ஜனநாயகத்தின் மீதும் ஒன்றுபட்ட ஆட்சியின் மீதும் தமிழ் மக்களுக்கிருந்த அவநம்பிக்கை, சுகந்திர தமிழீழ தாயகக் கொள்கை போன்றவற்றினால் மஹிந்த அப்பொழுது ஆட்சியைக் கைப்பற்றியிருந்தார்.

ஆனால் அதன்பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தன்னுடய பௌத்த சிங்களப் பேரினவாதக் கொள்கையில் விடப்பிடியாக இருந்து முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் இதயங்களை கோரப் பற்களால் கிழித்தெறிந்து எமது தாயக விடுதலைப் போரட்டத்திற்குப் பின்னடைவுகளை ஏற்படுத்தி சிங்கள தேசத்தின் மன்னனாக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துள்ளார். இவர் தற்பொழுதும் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகும் ஆசையுடன் தேர்தல் களத்தில் குதிக்கவுள்ளார்.

இந்நிலையில் மஹிதவின் வெற்றிக்கு சவாலாக தேர்தலில் போட்டியிடவுள்ள எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் களமிறங்கக்கூடும் என்ற அனுமானத்தில் மஹிந்த, மீண்டும் விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பிற்கும் ரணிலுக்கும் இடையில் புலத்தில் தொடர்புகள் இருப்பதாகவும் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பு தொடர்ந்தும் பிரிவினைவாதப் போக்குடன் செயற்பட்டுவருவதாகவும் தெற்கில் பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
இத் தேர்தலிலும் தமிழ் மக்களின் வாக்குகளே ஸ்ரீலங்கா ஜனாதிபதியைத் திர்மானிக்கும் என்ற வகையில் தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கும் விருப்பம் கொண்டுள்ளார்.

இதற்காகவே கூட்டமைப்புடன் பேசத்தயார், இணைந்து செயற்படத் தயார், கூட்டமைப்பினர் இனப்பிரச்சினைத் தீர்வுவிடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றெல்லாம் தெரிவித்து பூச்சாண்டித்தனம் காட்ட முற்பட்டுள்ளார்.

கூட்டமைப்பினரும் இவர்களுடைய வடமாகாண சபையும் வைக்கோல் பட்டறை நாய்கள் என்று கிளிநொச்சியில் பேசிய மஹிந்த நேற்று பாராளுமன்றத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை அணைத்து முத்தமிட்டு தம்முடன் இணைந்து செயற்படுமாறு அழைத்துள்ளார். இக்காட்சியைக் கண்டதால் மெய்சிலிர்த்துப் போன மாவை.சோதிராசா உள்ளிட்டவர்கள் மஹிந்தவுடன் தம்மை மறந்த நிலையில் உரையாடியுள்ளனர்.

இவ்வாறு ஸ்ரீலங்காவின் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ் மக்களின் வாக்குகளுக்கு மீண்டுமொருமுறை விலை பேசப்படக்கூடிய அபாய நிலையைத் தேற்றுவிக்கும் என்பதில் ஐயமில்லை. இதனால் மீண்டுமொரு முள்ளிவாய்க்கால் அவலம் ஏற்படக்கூடிய நிலையும் ஏற்படுத்தப்படாலாம்.

இலங்கையில் மஹிந்த ராசபஷ தனது ஆட்சியில் சிங்களவர்களை சந்தோசமாக வாழவைத்துக்கொண்டு தமிழ் மக்களைக் கொன்றுகுவித்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது கூட்டமைப்பினருக்கு மஹிந்த வலைவீசி தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கு முயற்சித்து வருகின்றார். இதற்கு தமிழ்க் கூட்டமைப்பும் நிபந்தனைகளுடன் சாதகமாகப் பதிலளிக்கக் கூடடிய அரசியல் சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

ஆனால் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நிபந்தனைகளை செயற்படுத்தத் தவறுவார் என்பதை கடந்தகால அரசியலின் ஊடாக ஊகித்துக்கொள்ள முடியும்.

எனவே தமிழ் மக்களின் வாக்குகளை விற்று அந்த மக்களுக்கே அழிவுகளை ஏற்படுத்துகின்ற அரசியல் அணுகுமுறைகளில் கூட்டமைப்பினர் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டிய அதேவேளை சாணக்கியமான அரசியலுக்காக தமிழ் மக்களின் விருப்பங்களையும் காருத்துக்களையும் எமது இனத்தின் புத்திஜீவிகளிடமிருந்து பெற்று அதற்கமையச் செயற்படுவதே பொருத்தமானதாக அமையும்.

மீண்டுமொருமுறை முள்ளிவாய்க்கால் அவலத்தை ஒத்த அவலம் ஏற்படுவதற்கு சிங்கள அரக்கர்களுக்கு களமமைத்துக் கொடுப்பதை எமது மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதை சகலரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

~இராவணன்~

நன்றி, ரி.ரி.என்

Tags: , ,

Leave a Reply