மஹிந்தவை தோற்கடிக்க முடியாது; ஜீ.எல்.பீரிஸ்

peries2ஜாதிக ஹெல உறுமய அரசிலிருந்து வெளியேறுவதால் எமக்கு அச்சமும் இல்லை. தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தோல்வியும் இல்லை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை சமத்துவம் மிக்க நாடு. இதற்கமைய எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தீர்மானம் எடுக்கும் உரிமை உள்ளது. அரசில் இருக்கவோ அல்லது அதிலிருந்து வெளியேறவோ ஒரு கட்சிக்கு உரிமை உள்ளது.

அதற்கமைய அவர்கள் தமது தீர்மானத்தை எடுக்கலாம். பங்காளிக் கட்சிகளை எம்முடன் வைத்துக்கொள்ளவே அரசு என்ற அடிப்படையில் நாம் விரும்புகின்றோம். பங்காளிக் கட்சிகள் வெளியேறுவதை அரசு விரும்பாது.

இருப்பினும், ஹெல உறுமய அரசிலிருந்து வெளியேறத் தீர்மானித்தது. அது அரசிலிருந்து வெளியேறுவதால் எமக்கு அச்சம் இல்லை. எம்மை எவராலும் வீழ்த்த முடியாது.

ஹெல உறுமயவின் இந்த நடவடிக்கையால் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிக்கவும் முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply