யாழ். மாவட்டத்தில் 2014 இல் 13 பேருக்கு எயிட்ஸ்

aids2யாழ். மாவட்டத்தில் இதுவரை எயிட்ஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் என சுமார் 70 பேர் வரையில் இனம்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் இந்த ஆண்டு மாத்திரம் இனம் காணப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் தெரிவித்ததாவது,

யாழ். மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது 14 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 3பேர் சிறுவர்களாகவும் உள்ளனர். எனினும் ஆரம்பக் கட்ட பரிசோதனையில் மாத்திரமே எயிட்ஸ் நோய் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனினும் முழுமையான அறிக்கை கிடைத்த பின்னரே முழுமையான தகவலை வெளியிட முடியும்.

எயிட்ஸ் நோய் தொற்றுள்ள பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கே தொற்று ஏற்பட்டுள்ளது. அத்துடன் 2 பேர் தாமதமாகவே நோயைக் கண்டறிந்தமையால் இறப்பை சந்திக்க நேரிட்டது.

எனினும் உயிரிழப்பை பின்தள்ளிப்போடுவதற்கு ஏற்ற சிகிச்சை வசதிகள் தற்போது இருக்கின்றது. அவற்றை சரியாக பயன்படுத்தினால் ஏனையவர்களைப் போல வாழ முடியும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply