சிறிலங்காவின் புலனாய்வு பிரிவின் தலைவர்களுக்கான சந்திப்பு ஒன்று ஜனாதிபதியின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
அலரிமாளிகையில் வைத்து இந்த சந்திப்பு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு அரசியல் கள நிறுவனங்கள் குறித்த தகவல்கள் கிடைப்பதில் தாமதங்கள் நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்தே இந்த சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இதன் போது அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ள உறுப்பினர்கள் குறித்த இரகசியங்களை திரட்டுவது குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
















