கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை; அரசு அறிவிப்பு

tnalogo2ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற வேண்டிய தேவை எமக்கில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு எமக்கு தேவையில்லை. அங்குள்ள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே வாக்களிப்பர். வடக்கில் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் இருக்கின்றனர். எனவே மக்களின் ஆதரவு நிச்சயம் எமக்கு கிடைக்கும். ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நடைபெறப் போகும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ச அமோக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. எதிரணியினரின் செயற்பாடுகள் மாறுப்பட்டவையாக இருக்கின்றன. உண்மையில் கூற வேண்டுமென்றால் அவர்கள் பகல்கனவு காண்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply