வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துவதில் பயனில்லை – ஜே.வி.பி.

anurakura-disanayakeவெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துவதில் பயனில்லை என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளாகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எனினும், இவ்வாறு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவதில் பயன் கிடையாது என தெரிவித்துள்ளது. இதற்கு முன்னரும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் எனவும், தேர்தல் நிறைவில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாகவும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கண்கண்காணிப்பாளர்களாக கடமையில் ஈடுபடுத்தப்படுவர்களுக்கு தேர்தல் பின்புலம் பற்றி எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒர் சிறிய தேர்தல் கண்காணிப்பாளர்களை கொண்ட குழுவினால் ஒட்டு மொத்த நாட்டினதும் தேர்தல்;களை கண்காணிக்க முடியவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply