காட்டுத் தீ – அவுஸ்ரேலிய பிரதமருக்கு அனுதாபம் தெரிவித்த கோத்தா!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ அவுஸ்ரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசனை நேற்று தொலைபேசியில் அழைத்து அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ குறித்து அனுதாபம் தெரிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி, அடிக்கடி ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற ரீதியில் தற்போது அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள ​அனர்த்தத்தால் அங்குள்ள மக்களின் வேதனைகளை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலங்கை ஒரு தொகை தேயிலையை அன்பளிப்பு செய்வதாகவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ, அவுஸ்ரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசனிடம் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!