வடக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டதாக பேசுகின்ற அரசாங்கம் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காண முன்வரவில்லை என ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் வவுனியா மதகுவைத்தகுளத்தில் நேற்று நடைபெற்றது அதில் உரையாற்றும் போதே ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் அபிவிருத்தியை மேற்கொள்கிறோம் என்று அரச தரப்பினர் கூறிக்கொண்டு தமது சொந்தப் பைகளை நிரப்பிக் கொள்வதற்காகவே, வீதிகளை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
எனினும் அபிவிருத்தி பற்றி பெரிய அளவில் பேசுகின்ற அரசாங்கம் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காண முன்வரவில்லை.
இதேவேளை, இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியே முன்னின்று உழைப்பதுடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஐக்கிய தேசியக் கட்சியால் மாத்திரமே முடியும் என்று சர்வதேசம் உட்பட பலரும் நம்புகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
















