இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருவதாக அமெரிக்க செனட்டர் ஜோன் மெக்கேன் தெரிவித்துள்ளார். பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்கா காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
சிறுபான்மை, பெரும்பான்மை இன சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு ஆதரவளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையுடன் அமெரிக்கா சுமூகமான உறவுகளைப் பேணி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சரியான உள்ளக விசாரணைகள் நடத்தப்படாத பட்சத்தில் சர்வதேச விசாரணைகளுக்கான அழுத்தங்கள் வலுப்பெறுவதனை தவிர்க்க முடியாது என ஜோன் மெக்கேன் தெரிவித்துள்ளார்.
















