இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நேற்று தமது இரண்டாவது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது. முதலாவது இடைக்கால அறிக்கை கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!