வடமேல் மாகாண சபைத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சிலாபம் – பங்கதெனிய பிரதேசத்தில் நேற்று (13) இரவு இடம்பெற்ற இந்த மோதலில் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது மோதல் ஏற்பட்டுள்ளது.
ஒரு வேட்பாளரின் ஆதவாளர்களது வாகனத்தின் மீது மற்றைய வேட்பாளரது ஆதரவாளர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.
சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
















