இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்த சர்வதேசத்திடம் போதியளவு வலுவான ஆதாரங்கள் இல்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தலைவர் என அழைக்கப்படும் குமாரன் பத்மநாதன் (கேபி) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் யூகோஸ்லாவியாவில் நடைபெற்றது போன்றதல்ல. ஹிட்லர் போன்று பிழை விடப்படவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
*வட மாகாண சபை தேர்தல் விஞ்ஞாபனம் சர்ச்சைக்குரியது.
*புலிகளின் வட்டுக்கோட்டை தீர்மானம் மற்றும் ஒஸ்லோ பிரகடனத்தை கலந்த கலவை.
*வட மாகாண சபை தேர்தல் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.
*வட மாகாண சபை தேர்தல் வாய்ப்பை கூட்டமைப்பு மலுங்கடிக்கப்பார்க்கிறது.
*கூட்டமைப்பின் நோக்கம் சுயநலமானது.
*மாவை சேனாதிராஜாவுக்கு முதலமைச்சர் ஆசை, அவர்
*உயர்வதை சம்பந்தன் விரும்பவில்லை. சுரேஸுக்கும் விக்னேஸ்வரன் விருப்பமில்லை. ஆனால் சம்பந்தன் சமாளிக்கிறார்.
*விக்னேஸ்வரனை அமெரிக்கா சொல்லித்தான் கொண்டுவந்ததாக சம்பந்தன் பொய் சொல்கிறார்.
*ஆனந்த சங்கரியையும் சித்தார்த்தனையும் நம்பக்கூடாதென்று கூட்டமைப்புக்குள் சொல்லி வைத்துள்ளனர்.
*2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை பிரபாகரன் ஆதரித்தமை மிகப்பெரிய தவறு. மக்களின் இந்த பேரவலத்திற்கு பிரபாகரன்தான் காரணம் என கூறியுள்ளனர்.
*2010 ஜனாதிபதித் தேர்தலில் சம்பந்தன் முன்னாள் இராணுவ தளபதியை ஆதரித்தமை தவறு.
*சம்பந்தன் தமிழ் மக்களுக்கு தலைமை தாக்கக்கூடிய தலைவர்தானா? அவருடைய தீர்க்க தரிசனம்தான் என்ன?
*வடக்கு மக்கள் பிரச்சினை கூட்டமைப்பிற்கு புரியவில்லை.
போர் என்றால் இரு தரப்பிலும் குற்றங்கள் இழைக்கப்படும். அழிவு ஏற்படும்.
*யுத்தம் முடிந்து நான்கு வருடம் சென்றுள்ள நிலையில் அரசாங்கம் தன்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறது. எதிர்காலத்திலும் செய்ய வேண்டும்.
*இலங்கையில் நடந்த யுத்தம் குறித்து வலுவான ஆதாரங்கள் சர்வதேசத்திடம் இல்லை.
*எனவே யாரையும் சர்வதேச விசாரணைக்கு கொண்டுபோக இங்கு இடமில்லை.
*பத்திரிகையாளர்களே ஊடகவியலாளர்களெ செத்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற வாருங்கள் உங்களால்தான் முடியும் இந்த மக்களை காப்பாற்ற. உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
















