பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும்; என்கிறார் சீ.வி.விக்னேஸ்வரன்

vickneswaran5இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா மாநாட்டை புறக்கணிப்பதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது இலங்கை அரசாங்கத்துக்கு எதனைச் செய்ய வேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்துவதற்கு பொதுநலவாய நாடுகள் ஒரு அரங்கமாக அமையும்.

இதுபோன்றுதான் மாகாணசபைத் தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருந்தமையால் கிழக்கு மாகாணத்தை தமிழர்கள் இழந்துள்ளார்கள். எனவே எதிலும் ஒதுங்கியிருக்காது இணைந்திருக்கும் போது விடயங்களை சாதிக்கமுடியும்.

தாம் இந்த விடயங்களை ஏனைய அரசியல்வாதிகளை போல பார்க்கவில்லை எனவும் தமிழகத்தின் உதவி இலங்கை தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக தேவை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply