இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பு கடமை தவறியதாக அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஒப்புக்கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய போது பான் கீ மூன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என்பது மீளாய்வு அறிக்கையின் மூலம் உறுதியானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணிகளுக்கு உறுப்பு நாடுகள் போதியளவு ஒத்துழைப்பு வழங்கத் தவறிவிடுகின்றமை இலங்கை குறித்த மீளாய்வு அறிக்கையின் மூலம் தெளிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பாரிய மனித உரிமை மீறல்களின் போது உறுப்பு நாடுகளுக்கு எதிர்காலத்தில் காத்திரமான உதவிகள் வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
















