ஈரான் நாட்டை உளவு பார்ப்பதற்காக அமெரிக்காவால் அனுப்பப்பட்ட சில ஆளில்லா நவீனரக உளவு விமானங்களை ஈரான் விமானப்படை சிறை பிடித்து வைத்து வல்லரசு நாடுகளை மூக்கின் மீது விரலை வைக்கும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், போர் ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சுமந்தபடி மணிக்கு ஆயிரத்து 700 கி.மீட்டர் வேகத்தில் தொடர்ந்து 24 மணி நேரங்களுக்கு பறக்கவல்ல ஆளில்லா அதிநவீன போர் விமானத்தை அந்நாட்டின் விமானப்படையுடன் ஈரான் இணைத்துள்ளது.
´ஷஹித்-129´ என பெயரிடப்பட்டுள்ள இந்த போர் விமானம், ஒரே நேரத்தில் சக்தி வாய்ந்த 8 வெடிகுண்டுகள் அல்லது ஏவுகணைகளை சுமந்தபடி வெகுநீண்ட தூரத்தையும் குறுகிய நேரத்தில் சென்றடைந்து, அசையும் மற்றும் அசையா இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஆற்றல்மிக்கது என ஈரான் விமானப்படை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















