குர்ஷித் யாழ்ப்பாணம் வருகிறார்

salmanஇந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்டத்துக்கு முதல்முறையாக வருகை தரவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்புக்கு வருகை தரும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் மறுநாள் 8 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளார்.

8 ஆம் திகதி நண்பகல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் சல்மான் குர்ஷித், இங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியையும், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனையும் யாழ்ப்பாணத்தில் வைத்து தனித்தனியே அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன் இந்திய அரசின் நிதியுதவியில் இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களையும் அவர் பார்வையிடுவதுடன் அன்று மாலையே கொழும்பு திரும்பவுள்ளார் எனத் தெரியவருகிறது.

Tags: , ,

Leave a Reply