வெள்ளை மாளிகைக்கு அருகே இளம்பெண் பொலிஸாரால் சுட்டுக்கொலை

usa-mordஅமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அருகே பொலிசாரிடம் தப்பிக்க முயன்ற இளம்பெண் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லபட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை அருகே நேற்று கார் ஒன்று அதிவேகமாக வந்துக்கொண்டிருந்தது. ஒரு பெண் ஓட்டிவந்த அக்காரில், ஒரு வயது குழந்தையும் இருந்தது.

அந்த கார் அதிவேகமாக வந்ததால், வெள்ளை மாளிகை முன்பு அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கேட்டில் மோதியது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசார் அந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர்.

ஆனால், அக்காரை ஒட்டிய பெண் காரை பின்பக்கமாக செலுத்தி, தப்பிக்க முயன்றார். இதனால் பொலிசார் அக்காரை விரட்டி சென்றனர்.

பின்னர் கேபிடால் கட்டிடம் அருகே சென்றபோது அக்காரை பொலிசார் சுற்றி வளைத்தனர். அதை தொடர்ந்து காரை ஓட்டிச்சென்ற பெண் மீது பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் அப்பெண் உயிரிழந்தார்.

அவர் அருகே காரில் இருந்த ஒரு வயது பெண் குழந்தையை பொலிசார் மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், காரை ஒட்டிய பெண்ணின் பெயர் மரியம் கேரே என்பதும், அவருக்கு வயது 34 என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

கேரேவுடன் ஆயுதங்கள் ஏதுமில்லாத நிலையில், அவர் ஏன் இதுபோல் நடந்து கொண்டார் என இன்னும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply