ரெலோ தலைமைப் பதவியிலிருந்து விலக அடைக்கலநாதன் தீர்மானம்?

Selvam_Adaikalanathanரெலோ தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொள்ள செல்வம் அடைக்கலநாதன் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ரெலோவின் தலைமைப் பதவியிலிருந்து விலகப் போவதாக செல்வம் அடைக்கலநாதன் அறிவித்துள்ளார்.

இன்னும் ஓரிரு நாட்களில் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான இராஜினாமா கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளரிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ரெலோவிற்கு அமைச்சுப் பதவி ஒன்று கிடைக்கும் என எதிர்பார்த்திருந்ததாகவும், அது வன்னியை சார்ந்தவருக்கு கிடைக்கும் என கருதியதாகவும் எனினும் தமது கட்சியான ரெலோவின் உயர்பீடத்தின் முடிவு அதற்கு மாறானது என்பதனால் வன்ன்னி மக்களுக்கு பதில் சொல்லும் தார்மீகப் பொறுப்பு காரணமாக இந்த முடிவை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வன்னி மக்களுக்கு சேவையாற்ற முடியாத காரணத்தினால் கட்சித் தலைமையிலிருந்து விலகிக் கொள்ள போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் அலரி மாளிகையில் முதலமைச்சராக சீ.வி.விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது தொடர்பிலான தீர்மனம் கூட்டமைப்பிற்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்மானம் கூட்டமைப்பின் சர்ச்சை நிலமையை மேலும் பூதாகாரமாக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply