விவரணப்படங்களைத் தடுப்பதனூடாக உண்மையை மறைக்க இலங்கை அரசு முயற்சி – கெலம் மெக்ரே

callum-macrae-channel-4நேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய திரைப்பட விழாவில் தமது திரைப்படங்கள் திரையிடப்படுவதை தடுக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக கெலம் மெக்ரே கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கெலம் மெக்ரே,

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு தாம் உடந்தையாக இருந்தமைக்கான உண்மையை மறைக்க இலங்கை அரசாங்கம் முயற்சிக்கிறது. மேலும் இலங்கையின் கொலைக்களம் மற்றும் போர் தவிர்ப்பு வலயம் ஆகியவற்றின் மூலம் நாம் வெளியிட்ட போர், மனித உரிமை மீறல்களை அடுத்து அந்த குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதாக இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்தது.

உலக நாடுகளில் எமது விவரணப்படங்களை தடுக்க இலங்கை அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்த குற்றங்களின் ஆதாரங்களை வெளிப்படுத்துவதை எவரும் தடுக்க முடியாது. நீண்டகாலத்திற்கு அவர்களால் வெற்றியடைய முடியாது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

இந்நிலையில் நேற்று போர் தவிர்ப்பு வலயம் உள்ளிட்ட இலங்கை தொடர்பான மேலும் இரண்டு விவரணப்படங்களை தெற்காசிய திரைப்படவிழாவில் திரையிட திட்டமிட்டிருந்த நிலையில் அதனை நிறுத்துமாறு நேபாள அதிகாரிகள் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply