அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 42 பேர் பேருவளை பகுதியில் வைத்து இன்று அதிகாலை 2.40 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 29 ஆண்களும், 7 பெண்களும் மற்றும் 10 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர்களை குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
















