வட மாகாணத்தின் முதலமைச்சராக சிவி விக்னேஸ்வரன் இன்று (07) காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதற்கான நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ வித்தாரண, மைத்திரிபால சிறிசேன, பழனி திகாம்பரம், பிரபா கணேசன், ஜோன் அமரதுங்க, அஸ்வர், டளஸ் அழகப்பெரும, சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, தயான் ஜயத்திலக உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
















