சர்வதேச ஊடகவியலாளர்களின் பின்னணியே அவர்களின் அனுமதியை தீர்மானிக்கும்; என்கிறது அரசு

hegalia3பொதுநலவாய மாநாட்டில் செய்திகளை சேகரிப்பதற்காக அனுமதி கோரும் சர்வதேச ஊடகவியலாளர்களின் பின்னணியை ஆராய்ந்தே அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிலும் இந்த நடைமுறையே பின்பட்டிருந்தது. எனினும் மாநாட்டுக்கு எந்த ஊடகத்திலிருந்து ஊடகவியலாளர்கள் வருகிறார்கள் என்பதை நாம் பொருட்படுத்தப் போவதில்லை.

ஆயினும் வெளிநாட்டு ஊடகங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களை மீளாய்வு செய்த பின்னர் லண்டனில் உள்ள பொதுநலவாய நாட்டு செயலகத்தின் நடைமுறைக்கு அமைய அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

நாம் கடைப்பிடிக்கும் வழிமுறைக்கு ஏற்புடைய வகையில் அமைந்துள்ள விண்ணப்பங்களுக்கே அனுமதி அளிப்போம். தேவை ஏற்படும் போது சகல சர்வதேச ஊடகவியலாளர்கள் பற்றியும் விரிவான ஆய்வுகள் நடத்தப்படும்.

எனினும் பொதுநலவாய நாடுகளின் 2013ம் ஆண்டு மாநாட்டுக்கான கொழும்பில் உள்ள செயலகம் மாநாட்டின் செய்திகள் எழுதுவதற்கு யார் தகுதியுடையவர்கள் என்பது பற்றி தீர்மானிக்கும்.

அதன்படியே உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் விண்ணப்பிக்கும் போது அவற்றை ஆய்வு செய்து அதற்கான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சனல் 4 ஊடகவியலாளர் ஒருவர் கொழும்பை வந்தடைந்துள்ளதாகவும் தகவல் அறிந்து புலனாய்வு விசாரணைகளும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply