விக்னேஸ்வரன் கூறுவது போல வடக்கு கிழக்கை இணைக்க முடியாது; அரசு தெரிவிப்பு

vikineswaran5வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நாட்டில் நிலவும் சமாதான சூழலைக் குழப்பும் வகையில் நடந்து கொள்வது தவறானது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நேற்று ஊடகங்கம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதனைத் தெரிவித்த போதும் நாட்டின் அரசியலமைப்புக்கு மாறாக எதையும் நடைமுறைப்படுத்த முடியாது நாட்டில் அரசியலமைப்பு ஒன்று உள்ளது. அதற்கிணங்கவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். வடக்கு கிழக்கு இணைப்பானது நாட்டின் நடைமுறைச் சட்டங்களுக்கு அமையவே நாட்டு மக்களின் இணக்கப்பாட்டோடு ஏற்படுத்தப்பட்டதாகும்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாம் நினைத்தவாறு ஒரு ஒழுங்கு முறையின்றி மேலதிக அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு கூறுவாரானால் அது கவலைக்குரிய விடயம்.

எனினும் நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அன்னியோன்ய நல்லுறவுடன் ஐக்கியமாக வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில் தன்னிச்சையாக இத்தகைய கருத்துக்களைத் தெரிவிப்பது முறையற்றது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணம் வட மாகாணத்துடன் சேர்ந்து செயற்பட விரும்பினால் அதனை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply