இலங்கை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் சுவிஸ் அதிகாரிகள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் அண்மையில் நாடு கடத்தப்பட்டிருந்தார். இவர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த நிலையில் நாடு கடத்தப்பட்டிருந்தனர். மீண்டு;ம் கடந்த வாரம் குறித்த குடும்பத்தினர் சுவிட்சர்லாந்தை சென்றடைந்திருந்தனர். இவர்களுக்கு புகலிடம் வழங்குவதுற்கு சுவிட்சர்லாந்து அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்,
குறித்த குடும்பத்திற்கு புகலிடம் வழங்குவது தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படுகின்றனவா என்பது குறித்து சுவிட்சர்லாந்து அதிகாரிகள் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்து ஆராய்ந்துள்ளனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையரிடம் சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரிகளும் நேரடியாக தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதன் போது, இலங்கை அதிகாரிகள் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், குடும்பத்தினருக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது, உடல் நிலை, பிள்ளைகளின் நிலைமை போன்ற காரணிகளை கருத்திற் கொண்டு குறித்த புகலிடம் வழங்கப்படுவதாக சுவிட்சர்லாந்து மத்திய குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
















