இலங்கையில் 400 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் முதலீட்டில் கசினோ திட்டம்

casinoஇலங்கையில் கசினோ விளையாட்டுக்காக 400 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை முதலிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய கசினோ வர்த்தகர் ஜேம்ஸ் பாக்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஐந்து நட;சத்திர ஹோட்டல் ஒன்றின் ஊடாக இந்த விளையாட்டு சுற்றுலா பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மேலும் இலங்கையின் பேஹர வாவியை மையமாக வைத்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த வர்த்தகத்தின் மூலம் சுமார் 2500 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியும் என்று பாக்கர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு 2016ம் ஆண்டளவில் 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பிலேயே இந்த கசினோ திட்டம் அமுல் செய்யப்படவுள்ளதுடன் இந்த திட்டத்துக்காக 450 அறைகளை கொண்ட சகல வசதிகளையும் கொண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அவசியம் குறித்து தாம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாக பாக்கர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 10 வருட விடுமுறை வரிச்சலுகைக் கொண்ட கசினோ உட்பட்ட கலவை அபிவிருத்தி திட்டம் ஒன்றுக்கு அமைச்சசரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கையின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அண்மையில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply