மகிந்த ராஜபக்ஷ தேவைக்கு ஏற்றால் போல நீதிமன்ற தீர்ப்பை மாற்றுகிறார் ; குற்றஞ்சாட்டுகிறார் மங்கள சமரவீர

Mangala-Samaraweeraசிறைக்குச் சென்றாலும் தூக்கு தண்டனை பெற்றாலும் கடும் போக்குடைய ஊழல் நிறைந்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் மன்னிப்புக் கேட்கமாட்டேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நான் மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறே மன்னிப்புக் கேட்கமாட்டார் என அவர் குறிப்பிட்டார்.

பத்திரிகைகளில் வெளியாகியுள்ள தகவல் உண்மை எனில் அதாவது எனக்கு பிணை வழங்கியிருப்பதிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவின் தேவைக்கு ஏற்றால்போல் நீதிமன்றம் மற்றும் பொலிஸ் தீர்ப்புக்களை மாற்ற முடியும் என்பது புலனாகிறது.

மேலும் மாத்தறை மாவட்டத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 45 பேர் வரையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் மாத்தறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அல்லது சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிடவுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை தனியார் ஊடகம் ஒன்றிற்கு எதிராக நீதிமன்றிற்கு செல்லவுள்ளதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

Tags: , ,

Leave a Reply