பொம்மைத் துப்பாக்கி வைத்திருந்த சிறுவனை சுட்டுக்கொன்ற பொலிஸார்

boy-gunஅமேரிக்காவில் நிஜத் துப்பாக்கி எனக் கருதி, பொம்மைத் துப்பாக்கி வைத்திருந்த சிறுவனை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாந்தாரோசா என்ற நகரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஆண்டிலோ பாஸ்.

இவன் தன் நண்பருடைய பொம்மை துப்பாக்கி ஒன்றை எடுத்து விளையாடிக் கொண்டு இருந்துள்ளான்.

சமீபகாலமாக சிறுவர்கள் வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து வந்து தனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், சிறுவர்களின் இந்த துப்பாக்கி விளையாட்டைத் தவறாகப் புரிந்து கொண்ட சிலர், தொலைவில் இருந்து பார்த்த போது சிறுவன் துப்பாக்கி மூலம் தனது நண்பனை மிரட்டுவதாக நினைத்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், சிறுவனை சுற்றி வளைத்து துப்பாக்கயை கீழே போடும்படி எச்சரித்துள்ளனர். ஆனால், சூழ்நிலையின் விபரீதம் புரியாமல் குழப்பத்தில் இருந்த சிறுவன் துப்பாக்கியைக் கீழே போடவில்லை.

எனவே, மற்றொரு சிறுவனைக் காப்பாற்றுவதாக நினைத்து பொலிசார் ஆண்டிலோவைச் சுட்டுள்ளனர். கிட்டத்தட்ட 7 முறை துப்பாகி சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே ஆண்டிலோ பரிதாபமாக உயிரிழந்தான்.

மேலும், அருகில் இருந்த 3 பேர் காயமடைந்தனர். பின்னர் சோதனை செய்ததில் ஆண்டிலோ வைத்திருந்தது பொம்மைத் துப்பாக்கி என்ற உண்மை தெரியவந்துள்ளது.

Tags: , , ,

Leave a Reply