தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது .
அதன்படி நாட்டின் தேசியப் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளே தீர்மானம் எடுப்பார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதன்படி வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாட்டின் ஏனைய முதலமைச்சர்களைப் போன்று செயற்பட வேண்டுமே ஒழிய மாறான விடயங்களில் ஈடுபடக் கூடாது என்றார்.
இதேவேளை, பொலிஸ் சேவையை துண்டுகளாக பிரிக்க அரசாங்கம் தயாரில்லை. விக்னேஸ்வரனுக்கு தேவையான வகையில் பொலிஸ் சேவையின் அதிகாரங்களை பிரிப்பதற்கு இடமளிக்க முடியாது எனவும் உயர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கிற்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் பொலிஸ் திணைக்களம் பிளவடையக் கூடுமெனவும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

















