“உலகின் எல்லா நாடுகளிலும் மனிதஉரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன நாங்களும் மீறினோம் இப்போ சரி செய்கிறோம்”

Prasadஉலகின் எல்லா நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அதனை சரி செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கையில் நடத்தப்பட வேண்டுமென ஏற்கனவே உலகின் அனைத்து நாடுகளுமே ஏகமனதாக தீர்மானித்திருந்தன என அவர் சுடடிக்காட்டியுள்ளார்.

எனவே, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்க வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அமர்வுகளி;ல் பங்கேற்கத் தவறினால் குறித்த நாடுகள் தனிமைப்படுத்தப்படக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இந்திய பிரதமர் இந்தியாவிற்கு மட்டும் தலைவர் அல்ல எனவும் ஆசியாவிற்கும் தலைவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை நினைவில் நிறுத்திக் கொண்டு இந்திய தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பதா இல்லையா என்பதனை இன்னமும் பிரதமர் மன்மோகன் சிங் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Tags: ,

Leave a Reply