வெளிநாடுகளின் தூதுவர்கள் வடக்கு முதல்வருடன் சந்திப்பு; அடுத்த வார நடுப்பகுதியில் நடக்கும்

meetingவடக்குக்கு வருகை தரவுள்ள அமெரிக்கத் தூதுவர், ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர், கொரியத் தூதுவர் ஆகியோர் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசவுள்ளனர் எனத் தெரிய வருகிறது.

அடுத்தவாரம் நடுப் பகுதியிலேயே இந்தச் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன எனத் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் முதல் முறையாகத் தமிழர் அரசு நிறுவப்பட்டுள்ளது. தமிழர் ஆரசின் முதலமைச்சராக க.வி.விக்னேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில் வடக்குக்கு வருகை தரும் சர்வதேச இராஜதந்திரிகள் வடக்கு மாகாண முதலமைச்சரையும் சந்திக்கவுள்ளனர்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே.சிசன் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மாதம் 30 ஆம் திகதி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன் போது வடக்கு மாகாண முதலமைச்சரைம் அவர் சந்திக்கவுள்ளார். அதேபோன்று கொரியத் தூதுவரும் வடக்கு முதலமைச்சரை அன்றைய தினமே சந்திக்கவுள்ளார்.

இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் டேவிட் டாலீயும் வடக்குக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சரை அவர் சந்திக்கவுள்ளார்.

Tags: , , ,

Leave a Reply