நாங்களும் மாநாட்டுக்கு வரமாட்டோம்; விக்கிரமபாகு கருணாரட்ன

vikramaகொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை தமது கட்சி புறக்கணிக்கும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

எனினும் மாநாடு நடைபெறும் காலத்தில் மாற்று வழிகள் ஊடாக அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தாலும் விடுக்கா விட்டாலும் அதில் பங்கேற்க போவதில்லை என ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துவிட்டது.

மேலும் ஜே.வி.பியும் இதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. அத்துடன் மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் முன்னர் தமக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

இருப்பினும் 53 நாடுகளில் இதுவரை 13 நாடுகளே உத்தியோக பூர்வமாக வருகையினை உறுதிப்படுத்தியுள்ளதுடன் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பொதுநலவாய மாநாட்டிற்கு எதிர்ப்பலைகளே அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply